இடுகைகள்

டிசம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சளி, இருமல் போக்கும் வெற்றிலை ரசம் / Vetrilai Rasam / Vetthalai Rasam / Betel Leaves Rasam for Cough and Cold Tips in Tamil

படம்
தேவையானவை:    வெற்றிலை - 6,  தக்காளி - 2,  உப்பு - தேவையான அளவு,  மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,  சீரகத்தூள் - 1 டீஸ்பூன்,  பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை தாளிக்க:  நெய் - 1 டீஸ்பூன், சீரகம் - 1 சிட்டிகை. செய்முறை:  தக்காளியை நறுக்கி, ஒரு பாத்திரத்தில் சேர்த்து அத்துடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். லேசாக கொதி வரும்போது வெற்றிலையை அரைத்து வடிகட்டி சாறு எடுத்து கலவையில் சேர்த்துத் தாளிக்கக் வேண்டியதை தாளித்து சேர்த்தால், வெற்றிலை ரசம் ரெடி. குளிர்காலத்தில் சளி , இருமல், காய்ச்சலினால் அவதிப்படுவோர் மட்டுமல்லாமல்  அனைவரும் இந்த ரசத்தை சூடான சாதத்தில் ஊற்றி பிசைந்து சாப்பிடலாம் . சூப் போலவும் அருந்தலாம் .

அடர்த்தியான முடியை பெற இந்த ஜூஸ்களை மறக்காம குடிங்க / Juices for Hair Growth in Tamil / Hair Growth Tips in Tamil

படம்
  ஜூஸ் அனைவருக்கும் பிடித்த ஒன்று, குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பி குடிப்பர். சில ஜூஸில் வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளது. இது முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் கற்றாழை ஜூஸ் கற்றாழையில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ உள்ளன. இந்த மூன்று வைட்டமின்களும் செல் வளர்ச்சிக்கு அவசியமானவை. ஆரோக்கியமான செல் வளர்ச்சிக்கும் உதவும். செய்முறை  கற்றாழை ஜூஸ் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. 20 மில்லி கற்றாழை ஜெல் (செடியிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்) எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்கலாம். துளசி , நெல்லிக்காய் ஆகியவற்றையும் கற்றாழையோடு கலந்து குடிக்கலாம். வெள்ளரிக்காய் ஜூஸ் வெள்ளரிக்காயில் உள்ள வைட்டமின் ஏ ஸ்கால்ப்புக்கு உதவி, முடி வேகமாக வளரச் செய்கிறது. முடி ஆரோக்கியமானதாகவும் உள்ளது. செய்முறை  இரண்டு வெள்ளரிகளை உரித்து, இரண்டையும் 2-3 துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். மிக்ஸியில் போட்டு தண்ணீர், புதினா இலைகள் , எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து அரைத்து பருகலாம். கேரட் ஜூஸ் கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ நிரம்பியுள்ளது, இந்த இரண்டு சத்துக்களும் முடி வளர்ச்சியைத் தூண்ட உதவுகிற

சங்குப் பூ / Butterfly Pea Flower benefits in tamil / Sangu poo tips in tamil

படம்
  சங்கு பூ   இதன் வேரிலிருந்து விதைகள் வரை இந்தத் தாவரம் முழுவதும் பல மருத்துவ பலன்கள் நிறைந்துள்ளன. இலையை மஞ்சளுடன் பயன்படுத்தினால் கட்டி, வீக்கம் கரைக்கும். வேருடன் மிளகு சேர்த்து கொதிக்க வைத்து கசாயம் செய்து காலை மாலை அருந்திவர சளி கோழை நீங்கும். ஆனால் இவற்றைப் பக்குவத்துடன் பயன்படுத்த வேண்டியுள்ளதால் உட்கொள்ளும் முன்னர் மருத்துவரின் ஆலோனைப் பெற வேண்டியது மிகவும் அவசியம். இம்மலர் பெண்களின் கர்ப்பப்பை த் தொடர்பான மாதவிடாய் சிக்கல்கள், குழந்தையின்மைச் சிக்கல்கள் மற்றும் சிறுநீர் தொற்றுகளைச் சரி செய்யக்கூடியது எனவும் சில மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன.  இம்மலர்கள் மனசோர்வு, மனக்கவலை, உடலில் உள்ள அமிலத்தன்மை ஆகியவற்றை நீக்கவல்லது. சங்குப்பூவில் ஆண்டி ஆக்சிடன்ட் (Antioxidant) நிறைந்துள்ளதால் இது நம் உடலில் உள்ள உயிரணுக்கள் சேதமைடவைதைப் பெருமளவு தடுத்து நம்மை ஆரோக்கியமுடன் இருக்கச்செய்வதுடன் நம் சருமம் இளைமையுடன் தோன்றவும் உதவுகிறது. மூச்சுத் திணறல் , இருதய சம்பந்தமான நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. தாய்லாந்து, சீனா உட்பட பல ஆசிய நாடுகளின் நட்சத்திர உணவகங்களில் ராயல் உணவுவகைக

கொள்ளு ரசம்: உடல் எடைகுறைய, சளி தொல்லை நீங்க / Horsegram Rasam for Weight lose and Cold tips in tamil

படம்
  தேவையானவை: கொள்ளு – அரை கிண்ணம், புளி – 50 கிராம், மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை, மல்லி, மிளகு – தலா ஒரு தேக்கரண்டி, சீரகம் – 2 தேக்கரண்டி, தக்காளி – 2, பூண்டு – 3 பல், பச்சை மிளகாய் – 2, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 3 தேக்கரண்டி, கடுகு, சீரகம் – தலா அரை தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் – 1. செய்முறை: கொள்ளை ஊறவைத்து அலசி, தண்ணீர் சேர்த்து வேகவைத்து, மசித்துக் கொள்ளவும். ரசப்பொடிக்கான மிளகு, சீரகம், மல்லியை மின் அம்மி (மிக்ஸி) அல்லது அம்மியில் பொடித்துக்கொள்ளவும். புளியை ஊறவைத்துக் கரைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மசித்த கொள்ளு, தண்ணீர், அரைத்த பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, இளஞ்சூட்டில் வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைப் போட்டுத் தாளித்து, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, அதை, ரசத்தில் கொட்டி இறக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையைச் சேர்க்கவும். பலன்கள்: கொள்ளு, கொழுப்பைக் குறைக்கும் என்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்குச் சிறந்த தேர்வு. கோடையிலும் சளித் தொல்லையால் அவதிப்படுபவர்கள், இந்த ரசத்தை அருந்தலாம்.

கொசுவை விரட்ட வழிகள் / Natural ways to get rid of Mosquitoes in Tamil / Tips in Tamil

படம்
 ஒரு மண் சட்டியில் தீ கனல் போட்டு அதில் பச்சை வேப்பிலை போட்டு அதன்மீது சிறிது மஞ்சள் தூளையும் தூவிவிடுங்கள். அப்புறம் பாருங்கள்.அதிலிருந்து வரும் புகை கொசு வை விரட்டோ விரட்டுனு விரட்டிவிடும். தேங்காய் நார்களை எரித்து அதன் புகையை வீட்டில் காண்பித்தாலும் ஒரு கொசுகூட இருக்காது! மாம்பூவை எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டின் ஒரு பக்கத்தில் நெருப்பை வைத்து அதன்மீது மாம்பூக்களை போடுங்கள். அதிலிருந்து வரும் புகையால் கொசு தொல்லை ஒழிந்துபேகும்! கொசுவுக்கு பிடிக்காத வாசனை பூண்டு வாசனை! இந்த பூண்டு வாசனையை கண்டா கொசுவுக்கு சுத்தமா பிடிக்காது! அதனால நீங்க பூண்டு சாப்பிட்டிங்கனா அந்த பூண்டு நாத்தம் தாங்காம கொசு ஓடியே போய்விடும்! நொச்சி இலை மிகச் சிறந்த கொசுவிரட்டி.   பேய்துளசி, காட்டுத்துளசி ஆகியவையும் கொசுக்களை அப்புறப்படுத்த உதவும். இவற்றைத் தூளாக்கி, மாலைப் பொழுதில் சாம்பிராணி புகைபோடுவதுபோல தீயிலிட்டு வீடு முழுவதும் பரவச் செய்ய வேண்டும். பின்னர் பூண்டு எண்ணெய், நீரைச் சேர்த்து வீட்டின் ஜன்னல்களில் தடவி, கதவைப் பூட்டிவிட்டால் அன்றைய நாள் முழுவதும் கொசுக்கள் வீட்டுக்குள் புகாது. இதேபோல புதினா, கேந்த

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் அச்சு முறுக்கு /அச்சப்பம் / Christmas Special Rose Cookies (Achu Murukku) Achappam

படம்
  தேவையான பொருட்கள்:  அரிசி மாவு - 1 கப் மைதா மாவு - 1/4 கப் சர்க்கரை - 1/4 கப் தேங்காய் பால் - 3/4 கப் உப்பு - தேவையான அளவு வெண்ணிலா எசன்ஸ் - 1/4 தேக்கரண்டி செய்முறை:  துருவிய தேங்காய் பூவை 1/2 கப் வெதுவெதுப்பான நீர் சேர்த்து அரைத்து பால் எடுத்து வைத்துக்கொள்ளவும். அரிசி மாவு , மைதா மாவு, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். அதில் சர்க்கரை தேங்காய் பால் சேர்த்து கரைக்கவும். எசன்ஸ் சேர்த்து கலக்கவும். தோசை மாவு போல கெட்டியாக கரைக்கவும். மாவு அச்சில் எடுத்தால் சொட்டாமல் இருக்க வேண்டும். எண்ணெய்யை காயவைத்து அதில் முறுக்கு அச்சை அதில் வைத்து சூடாக்கவும். கரைத்த மாவில் அச்சை 3/4 பாகம் மட்டும் நனைத்து சூடான எண்ணெய்யில் விட்டு லேசாக அசைக்க வேண்டும். முறுக்கு அச்சிலிருந்து பிரிந்து பொன்னிறமாக வரும். பிறகு எண்ணெய்யை வடித்து  எடுக்கவேண்டும். சுவையான அச்சு முறுக்கு தயார்.

கழுத்திலுள்ள கருமையை விரட்ட / Dark Neck Home Remedies in Tamil

படம்
 உருளைக்கிழங்கு கழுத்தில் இருக்கும் கருமையை போக்கும் தன்மை கொண்டது. உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து சாறு எடுத்து கழுத்தை சுற்றி தேய்த்து வரலாம். தயிரும் கருமையை போக்கி பிரகாசம் சேர்க்கக்கூடியது.  சிறிதளவு தயிருடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை கலந்து கழுத்தை சுற்றி தடவலாம். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். வாரம் ஒருமுறை செய்து வந்தால் போதும். நல்ல மாற்றம் தென்படும்.  இரண்டு டேபிள்ஸ்பூன் கடலை மாவுடன் மஞ்சள் அரை டீஸ்பூன், எலுமிச்சை சாறு அரை டீஸ்பூன், சிறிதளவு ரோஸ் வாட்டர் ஆகியவற்றை கலந்து பசை போல் தயார் செய்யுங்கள். அதனை கழுத்தை சுற்றி தடவி கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். இவ்வாறு வாரம் இருமுறை செய்துவந்தால் கருமை நீங்க தொடங்கிவிடும். ஆப்பிள் சிடர் வினிகரையும் பயன்படுத்தலாம். இரண்டு டேபிள்ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகருடன் நான்கு டேபிள்ஸ்பூன் தண்ணீர் கலந்து பஞ்சில் முக்கி கழுத்தை சுற்றி தேய்த்துவரலாம். விரைவில் கருமை நீங்கிவிடும்.  பேக்கிங் சோடாவையும் உபயோகிக்கலாம். சிறிதளவு பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் கலந்து பசைபோல் குழைத்து கழுத்தில் தடவி வரலாம். க

ஜீரணத்துக்கான வேப்பிலை கட்டி / Home Remedy for Digestion

படம்
  வேப்பிலை கட்டி  தேவையானவை: இளசான நார்த்தை இலைகள் - 1கப்  இளசான எலுமிச்சை இலைகள் - 1கப்  எலுமிச்சை சாறு -2 ஸ்பூன்  மிளகாய் வற்றல் - 10 உப்பு - சுவைக்கு  ஓமம் - 1ஸ்பூன்  பெருங்காயதூள் - 1ஸ்பூன்  செய்முறை: இலைகளை கழுவி, நரம்பை எடுத்து விடவும். இத்துடன் உப்பு , மிளகாய் வற்றல் , ஓமம் , பெருங்காயத்தூள், எலுமிச்சை சாறு சேர்த்து , மிக்ஸியில் அரைக்கவும். இது ஊறுகாய் போல. விருந்தை ஜீரணிக்க உதவும். இதை பாட்டலில் போட்டு பிரிட்ஜ் வைத்தால் , பல வாரங்கள் கெட்டு போகாது .

நோய் எதிர்ப்பு சக்தி / Immune System tips in tamil

படம்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பவர்களை வைரஸ் அவ்வளவு எளிதில் தாக்காது. அதற்கேற்ப அன்றாட உணவில் வைட்டமின் சி உணவுகளை அதிகம் எடுத்து கொள்வது மிகவும் முக்கியம். நெல்லிக்கனி எதிர்ப்புசக்தியை அதிகரிக்க கூடியது. தினமும் காலை நெல்லிக்காயை கொட்டை நீக்கி மிக்ஸியில் அடித்து சாறு பிழிந்து குடிக்கலாம். தினமும் ஒரு வேளை எலுமிச்சை சாறு, சமபாதி அளவு நெல்லிச்சாறு கலந்து பழச்சாறாக குடிக்கலாம். இனிப்புக்கு தேன் சேர்த்துகொள்ளலாம். பழங்கள் அனைத்துமே சத்துமிக்கவை என்பதால் பழங்கள் இல்லாமல் உணவை எடுக்க வேண்டாம். குறிப்பாக கொய்யா பழம் தினமும் சாப்பிடுவது எதிர்ப்புசக்தியை அதிகரிக் கும். இவை தவிர கீரைகள் காய்கறிகளையும் பயன்படுத்துங்கள்.உணவில் காரத்துக்கு மிளகாயை சேர்க்காமல் மிளகை சேருங்கள். கிருமி நாசினியான மஞ்சளை அன்றாடம் சமையலில் சேர்ப்பதுண்டு என்றாலும் கூட சற்று அதிகப்படியாக சேர்க்கலாம். குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் தினமும் பாலில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் மற்றும் மிளகுபொடியை சேர்த்து கொடுப்பதும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இப்படி உணவில் தினமும் இஞ்சி, மஞ்சள் தூள், மிளகு, நெல்லிக்கனி,

தேவையில்லாத சதைகளைக் குறைக்க சில வழிகள்! / Weight loss tips in Tamil

படம்
 உடலின் தேவையில்லாத எக்ஸ்ட்ரா சதைகளை குறைக்க சின்ன சின்ன உடல்பயிற்சிகள்:- தவிர்க்க வேண்டியவைகள்: முதலில் அதிக நேரம் தொலைக்காட்சி பெட்டியின் முன்போ அல்லது இப்படி ஏதாவது பதிவு போடணும் என்றோ கம்ப்யூட்டர் முன்பு உட்காராதீங்க. அதிகமாக நொருக்கு தீனி சாப்பிடாதீங்க. உங்களுக்கு மிகவும் பிடித்த ஆயில் உணவுகளையும், பொழுப்பு நிறைந்த .. பிட்ஸா, பர்கரையும் மறந்துவிடவும். வீட்டுக்கு வேலைக்கு ஆள் வந்தால், உங்கள் உடல் ஆரோக்கியத்தை எண்ணிக்கொண்டு யோசிக்கவும். மதியம் தூக்கம் கட்டாயம் வேண்டாம். அதிகப்படியான சதைகளை குறைக்க சில பயிற்சிகள்: இடுப்பில்: பெண்களுக்கு அதிக சதை போடுவதே இடுப்பில் தான். அவங்க கட்டாயம் இடுப்புக்கு பயிற்சி கொடுக்கணும். நல்ல நடைபயிற்சி மிக முக்கியம். நல்லா டான்ஸ் ஆடுங்க. (ஆட தெரியவில்லை என்றாலும் இடுப்பை வளைத்து கால் கைகளை மடக்கி டான்ஸ் என்ற பெயரில் ஆடவும்.) நேராக நின்றுக்கொண்டு 2 கைகளையும் மேலே தூக்கி அப்படியே ஒரு கைகளை மட்டும் கீழே கொண்டு வரும்பொழுது இடுப்புடன் உடலையும் வளைக்கவும். இதை போல் 2 பக்கமும் 10 முறை செய்யவும். இதன் மூலம் இடுப்பின் மடிப்பு மற்றும் சதை குறையும். எந்த வேலை செய்

காளான் சாப்பிடுவதின் பயன்கள் / Benefits of Mushroom

படம்
    காளான் பிரியாணி, காளான் மசாலா, காளான் சாலட் என  காளானை கொண்டு சமைக்கப்படும் பலவகை உணவு வகைகளை நாம் ரசித்து உண்டிருப்போம்.  அந்த காளானில் அப்படி  என்ன என்ன சத்துக்கள் இருக்கு, அதை சாப்பிடுவதால் என்ன என்ன நன்மைகள் இருக்குனு பாக்கலாமா?   செலினியம்   :- காளான் செலினியம் எனப்படும் ரசாயன மூலக்கூறுகளை அதிகம் கொண்டது. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது. பற்கள், நகங்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது. ஆண்களுக்கு உயிரணுக்களை அதிகப்படுத்தி மலட்டு தன்மையை நீக்குகிறது. இதய நலன் :- குறைவான சோடியம் மற்றும் அதிகமான பொட்டாசியம் சத்துக்கள் காளானில் இருப்பதால் இது உடலில் உப்பின் தன்மையை சமநிலையில் வைத்து உடலுக்குள் ரத்த சுழற்சியை சீர்ப்படுத்துகிறது. நீங்கள் உயர் ரத்த அழுத்தத்தால் அவதி பட்டு வருகிறீர்கள் என்றால் உங்களுக்கான சிறந்த தேர்வாக காளான் இருக்கும். வயதாவதிலிருந்து தடுக்கிறது :- பலருக்கும் சிறு வயதிலேயே வயதான தோற்றம் மற்றும் மிக சீக்கிரமாக வயதான தோற்றம் அடைதல் போன்றவற்றிலிருந்து உங்களை பாதுகாக்க

குழந்தைகளுக்கு சளி இருமல் குணமாக / Home Remedies for Babies Cold and Fever

படம்
பனிக்காலத்தில் எல்லோரையும் சுலபமாக தாக்க கூடியது சளி , இருமல்  மற்றும் காய்ச்சல் போன்றவை பெரியவர்களை விட குழந்தைகள் தான் அதிகம் சளி காய்ச்சலால் அவதியுறுகின்றனர்  வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு அதற்கான வீட்டு வைத்திய முறைகளை இக்கட்டுரையில் காண்போம்  குறிப்பு : பச்சிளம் குழந்தைகளுக்கு வீட்டு வைத்திய முறைகள் சிலது ஒத்துக்கொள்ளாது என்பதால் குழந்தைகளின் வயதை வைத்து இந்த முறைகளை பின்பற்றி பயன்பெறுங்கள்  கற்பூரவள்ளி இலை  கற்பூரவள்ளி இலை, தூதுவளை, வல்லாரை, இவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து 100 மி.லி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து 50 மி.லியாக சுண்டக் காய்ச்சி, அதனுடன் சிறிது பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் மூக்கடைப்பு நீங்கும். சுவாசம் சீராகும் கற்பூரம்  தேங்காய் எண்ணெயை சிறிது சூடாக்கி அதில் தூள் செய்த கற்பூரத்தை போடுங்கள். இது நன்றாக ஆறிய பிறகு அதில் இருந்து 4 முதல் 5 சொட்டுகள் எண்ணெயை உள்ளங்கையில் தேய்த்து குழந்தையின் மார்பு பகுதியில் நன்றாக தடவி விடுங்கள். குறிப்பு : மிகவும் குறைவான அளவு கற்பூரத்தை பயன்படுத்துங்கள். ஏனெனில் அதி

ஒரு காளையின் அறிவுரை / Advice of the Bull

படம்
 ஒரு விவசாயிக்கு விசுவாசமான காளைமாடு ஒன்னு இருந்தது. அது எல்லா விதத்திலும் அவருக்கு உதவியாய் இருந்தது.  ஒரு நாள் அது பக்கத்துல கொசு ஒன்னு வந்துச்சு. அந்த கொசு காளை கிட்ட சொல்லிச்சாம், “நீ தினமும் அந்த விவசாயிக்கு நிறைய உதவி பண்ணுற, நீ தினமும் அந்த விவசாயியை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கூட்டிட்டு போற. அதுக்கு பதில் உனக்கு என்ன தான் கிடைக்குது வெறும் புல் மட்டும்தான் சாப்பிடக் கொடுக்கிறார்கள்”. அதுக்கு அந்த காளைமாடு சொல்லிச்சாம், “இங்க பாரு நண்பா அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல. மனிதர்களுக்கு உதவி பண்றது எனக்கு ரொம்பவே பிடிக்கும், அவங்க என்ன ரொம்பவே நல்லா பார்த்துக்குறாங்க”. அதுக்கு அந்த கொசு சொல்லுச்சாம், “இந்த மனிதர்கள் அவர்களோட தேவைக்காக தான் உன்னை பயன்படுத்துறாங்க அதனால தான் நான் இந்த மனிதர்களுக்கு உதவி பண்றது இல்லை.அதுக்கு பதில் அவர்களோட ரத்தத்தை நான் உரிந்து விடுவேன், ஆனால் நீ ரொம்ப பெரிய உருவமாக இருந்தும், இந்த மனிதர்களுக்கு நீ அடிமையாய் இருக்கிறாய். ஆனா என்ன பாரு நான் ரொம்ப சின்னதா இருக்கேன் ஆனாலும் அவர்களுடைய ரத்தத்தை  உரிந்து கொண்டு இருக்கிறேன்”. அந்த காளை மாடு சொல்லு

நீரிழிவு நோய்க்கான இன்சுலின் இலை சட்னி /Insulin leaf Chutney for Diabetics

படம்
இன்சுலின் இலை சட்னி  தேவையான பொருட்கள் :  இன்சுலின் இலை - 5nos கொத்தமல்லி - 1கைப்பிடி  தேங்காய் துருவல் - 2துண்டுகளில் இருந்து துருவினது. உளுந்து - 2ஸ்பூன்  காய்ந்த மிளகாய் - 4 பூண்டு - 4 பல்  இஞ்சி - சிறு துண்டு  மிளகு - 5nos  உப்பு - ருசிக்கு  செய்முறை  முதலில் கடாயில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், உளுந்து வறுத்து மிக்ஸி ஜாரில் போடவும் . பின் அதே கடாயில் தேங்காய் துருவல் ,பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி , மிளகு போட்டு வதக்கி கடைசியில் இன்சுலின் இலைகளை சேர்க்கவும் .  ரொம்ப நேரம் வதக்க வேண்டாம். உப்பு சேர்த்து கொஞ்சம் கரகரப்பாக அரைக்கவும். புளி சேர்க்க வேண்டாம் . வேண்டும் என்றால் கடுகு  கறிவேப்பில்லை போட்டு தாளிக்கலாம்.  சர்க்கரை நோயாளிகள் இந்த சட்னி தாராளமாக சாப்பிடலாம். தினம் 2 இலைகளை பச்சையாக சாப்பிடலாம். 

கிறிஸ்மஸ் ஷாப்பிங்-christmas shopping in tamil

படம்
 நீங்கள் பெரும்பாலானவர்களைப் போல இருந்தால் உங்கள் கிறிஸ்மஸ் ஷாப்பிங்கில் பெரும்பாலானவற்றை கடைசி நிமிடத்தில் செய்கிறீர்கள். கிறிஸ்மஸுக்கு முந்தைய இறுதி நாட்களில் எந்த மால் அல்லது ஷாப்பிங் சென்டருக்கும் சென்று பாருங்கள். உங்கள் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கான சரியான கிறிஸ்துமஸ் பரிசை இன்னும் தேடும் கடைக்காரர்களால் அக்ஷரார்த்தத்தில் நிரப்பப்பட்ட வாகன நிறுத்துமிடங்களையும் கடைகளையும் நீங்கள் காணலாம். கிறிஸ்மஸ் நெருங்கி வருகையில், கூட்டம் மேலும் மேலும் அமைதியிழந்து, பரிபூரண பரிசுக்கான தேடல் ஏற்றுக்கொள்ளக்கூடிய பரிசுக்கான தேடலாக மாறுகிறது. வருடத்தின் இறுதியில் கிறிஸ்துமஸ் வருகிறது என்றாலும், இந்த மகிழ்ச்சியான நிகழ்ச்சிக்கு தயாராக ஒரு முழு வருடமும் மக்களுக்கு இருக்கிறது என்றாலும், பெரும்பாலான மக்கள் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் ஷாப்பிங்கை முன்கூட்டியே செய்ய வேண்டும் என்று புத்தாண்டு தீர்மானங்கள் இருந்தபோதிலும் கடைசி நிமிடம் வரை தங்கள் ஷாப்பிங்கை விட்டு வெளியேறுகின்றனர். இந்தக் கட்டுரை கடைசி நிமிட கிறிஸ்துமஸ் ஷாப்பிங் செய்பவர்களின் சில வித்தியாசமான வகைகளைப் பற்றி விவாதிக்கும். கிறிஸ