அடர்த்தியான முடியை பெற இந்த ஜூஸ்களை மறக்காம குடிங்க / Juices for Hair Growth in Tamil / Hair Growth Tips in Tamil

 ஜூஸ் அனைவருக்கும் பிடித்த ஒன்று, குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பி குடிப்பர். சில ஜூஸில் வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளது. இது முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்


கற்றாழை ஜூஸ்



கற்றாழையில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ உள்ளன. இந்த மூன்று வைட்டமின்களும் செல் வளர்ச்சிக்கு அவசியமானவை. ஆரோக்கியமான செல் வளர்ச்சிக்கும் உதவும்.


செய்முறை 

கற்றாழை ஜூஸ் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. 20 மில்லி கற்றாழை ஜெல் (செடியிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்) எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்கலாம். துளசி, நெல்லிக்காய் ஆகியவற்றையும் கற்றாழையோடு கலந்து குடிக்கலாம்.


வெள்ளரிக்காய் ஜூஸ்



வெள்ளரிக்காயில் உள்ள வைட்டமின் ஏ ஸ்கால்ப்புக்கு உதவி, முடி வேகமாக வளரச் செய்கிறது. முடி ஆரோக்கியமானதாகவும் உள்ளது.


செய்முறை 

இரண்டு வெள்ளரிகளை உரித்து, இரண்டையும் 2-3 துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். மிக்ஸியில் போட்டு தண்ணீர், புதினா இலைகள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து அரைத்து பருகலாம்.


கேரட் ஜூஸ்



கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ நிரம்பியுள்ளது, இந்த இரண்டு சத்துக்களும் முடி வளர்ச்சியைத் தூண்ட உதவுகிறது. இளநரையிலிருந்தும் பாதுகாக்கிறது. அடர்த்தியான மற்றும் நீளமான கூந்தல் பெற தினசரி உணவில் கேரட் ஜூஸ் எடுத்து கொள்ளுங்கள்.


செய்முறை 

மூன்று கேரட்டின் மேல் தோலை உரித்து, நறுக்கி மிக்ஸியில் போட வேண்டும். எலுமிச்சை சாறு, புதினா இலைகள், உப்பு சேர்த்து தண்ணீர் கலந்து அரைத்து பருகி மகிழலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்கு பூ மருத்துவ பயன்கள் / Butterflypea Flower Tea / Blue Tea / Diabetics / Cancer / Weight Loss / Tamil Health Tips / Health Tips

கொசுவை விரட்ட வழிகள் / Natural ways to get rid of Mosquitoes in Tamil / Tips in Tamil