காளான் சாப்பிடுவதின் பயன்கள் / Benefits of Mushroom

   காளான் பிரியாணி, காளான் மசாலா, காளான் சாலட் என  காளானை கொண்டு சமைக்கப்படும் பலவகை உணவு வகைகளை நாம் ரசித்து உண்டிருப்போம்.

 அந்த காளானில் அப்படி  என்ன என்ன சத்துக்கள் இருக்கு, அதை சாப்பிடுவதால் என்ன என்ன நன்மைகள் இருக்குனு பாக்கலாமா?  



செலினியம்  :-

காளான் செலினியம் எனப்படும் ரசாயன மூலக்கூறுகளை அதிகம் கொண்டது. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது. பற்கள், நகங்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது. ஆண்களுக்கு உயிரணுக்களை அதிகப்படுத்தி மலட்டு தன்மையை நீக்குகிறது.


இதய நலன் :-

குறைவான சோடியம் மற்றும் அதிகமான பொட்டாசியம் சத்துக்கள் காளானில் இருப்பதால் இது உடலில் உப்பின் தன்மையை சமநிலையில் வைத்து உடலுக்குள் ரத்த சுழற்சியை சீர்ப்படுத்துகிறது. நீங்கள் உயர் ரத்த அழுத்தத்தால் அவதி பட்டு வருகிறீர்கள் என்றால் உங்களுக்கான சிறந்த தேர்வாக காளான் இருக்கும்.


வயதாவதிலிருந்து தடுக்கிறது :-

பலருக்கும் சிறு வயதிலேயே வயதான தோற்றம் மற்றும் மிக சீக்கிரமாக வயதான தோற்றம் அடைதல் போன்றவற்றிலிருந்து உங்களை பாதுகாக்கிறது. இதன் கூறுகள் உங்கள் உடலில் உள்ள ஃபிரீ ரேடிக்கல்களை செயல்பட விடாமல் செய்து நீங்கள் வயதான தோற்றம் பெறுவதிலிருந்து தடுக்கிறது.


ஆரோக்கியமான குடல் செயல்பாடு :-

இதில் உள்ள கரையக்கூடிய நார்சத்தான ஆலிகோசேக்கரைட் உங்கள் குடல்பகுதிகளில் ப்ரீபையோட்டிக்காக செயல்பட்டு உங்கள் பெருங்குடலில் நல்ல பாக்டீரியாக்களை பரவ விடுகிறது. இதன் மூலமாக உங்களது ஜீரண சக்தியும் , குடல் செயல்பாடும் ஆரோக்கியமாக அதிகரிக்கும்.


நீரிழிவு :-

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாக காளான் இருக்கிறது. இதில் குறைந்த அளவே கார்போஹைட்ரட் சத்து இருப்பதால் உங்களில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியான விகிதத்தில் வைக்கிறது. தினமும் ஒரு முறை சிறிதளவு காளான் உணவை சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் பலத்தை அளிக்கும். 


ரத்த சோகை :-

ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவு காளானாகும். காளான் இரும்பு சத்து அதிகம் கொண்டது. இதில் நிறைதிருக்கும் இரும்புச்சத்துகளை நமது உடல் விரைவாக ஏற்றுக்கொள்வதால் ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தி அதிகரித்து, ரத்த சோகை குறைபாடு நீங்கி உடல் பலம் பெற தொடங்கும்


புற்று நோய் :-

காளான் புற்று நோய் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்த போது சிறந்த பலன் தந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. அதிலும் குறிப்பாக மார்பக புற்று, பிராஸ்ட்ரேட் புற்று போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், காளானை சாப்பிட்டு வந்த போது அதிலிருக்கும் புற்று செல்களை அளிக்கும் ரசாயனங்கள் மேற்கூறிய புற்று நோயாளிகளின் நோய் பரவும் தன்மையை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயலாற்றுகிறது. 


கொலஸ்ட்ரால் :-

கொலஸ்ட்ரால் கொழுப்பின் ஒரு வடிவமாகும். பக்கவாதம், இதய நோய்கள் போன்றவற்றை தடுப்பதற்கு உடலில் சரியான அளவில் கொலஸ்ட்ரால் இருக்க வேண்டியது அவசியமாகும். காளான் அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் கெட்ட கொழுப்பு அதிகம் சேராமல், கொலஸ்ட்ராலின் அளவை சரியான விகிதத்தில் பராமரித்து உடலுக்கு நன்மையை செய்கிறது.


ரத்த அழுத்தம் :-

 உணவாக உண்ணப்படும் காளான்களில் பலவகைகள் உள்ளன. அனைத்து காளானிலும் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. பொட்டாசியம் நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களில் இருக்கும் இறுக்கத்தை தளர்த்தி ரத்த அழுத்தம் உயராமல் தடுக்கிறது. வாரமொரு முறை காளான் உணவுகளை சாப்பிடுவதால் ரத்த அழுத்த பிரச்சனைகள் குறையும். 


உடல் எடை :- 

உடல் எடை அதிகரிப்பது ஒரு கவலைக்குரிய பிரச்சனை ஆகும். உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், கொழுப்பு இல்லாத நார்ச்சத்து நிறைந்த காளான் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டு வருவது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நல்ல பலன் அளிக்கும். 


நோய் எதிர்ப்பு :- 

எர்கோத்தியோனின் எனப்படும் மூலப்பொருள் காளானில் அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் கலந்து அதிலிருக்கும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது. வெளியிலிருந்து உடலுக்குள் வரும் நோய்களை உண்டாகும் ஆபத்தான நுண்ணுயிரிகளை எதிர்த்து, அவற்றை அழித்து உடலை தொற்று நோய்கள் அண்டாத வாறு காக்கிறது. 

வைட்டமின் டி :- 

காய்கறிகளில் வைட்டமின் டி சத்து இருப்பது மிகவும் அரிதாகும். ஆனால் காளான் இந்த வைட்டமின் டி சத்தை அதிகம் கொண்டிருக்கிறது. மேலும் உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களையும் காளான் கொண்டிருப்பதால், அதை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது.

இனி காளான் சாப்புடுறப்போ எல்லாம் இத்தன நன்மைகளை மனசுல நெனைச்சி நல்லா சாப்பிடுங்க 🍄

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்கு பூ மருத்துவ பயன்கள் / Butterflypea Flower Tea / Blue Tea / Diabetics / Cancer / Weight Loss / Tamil Health Tips / Health Tips

ஆளி விதைகள் பயன்கள் / Flax Seeds Benefits / Tamil Health Tips / Lifestyle tips / Health Remedies in Tamil / Aali Vithaigal / Tamil Health Remedies

அடர்த்தியா முடி வளர வீட்லயே தயாரிக்கலாம் பிருங்கராஜ் எண்ணெய்! / Bhringraj Oil for Hair Growth / Hair Growth / Hair Oil / Homemade Hair Oil