கொசுவை விரட்ட வழிகள் / Natural ways to get rid of Mosquitoes in Tamil / Tips in Tamil

 ஒரு மண் சட்டியில் தீ கனல் போட்டு அதில் பச்சை வேப்பிலை போட்டு அதன்மீது சிறிது மஞ்சள் தூளையும் தூவிவிடுங்கள். அப்புறம் பாருங்கள்.அதிலிருந்து வரும் புகை கொசுவை விரட்டோ விரட்டுனு விரட்டிவிடும்.

தேங்காய் நார்களை எரித்து அதன் புகையை வீட்டில் காண்பித்தாலும் ஒரு கொசுகூட இருக்காது!


மாம்பூவை எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டின் ஒரு பக்கத்தில் நெருப்பை வைத்து அதன்மீது மாம்பூக்களை போடுங்கள். அதிலிருந்து வரும் புகையால் கொசு தொல்லை ஒழிந்துபேகும்!

கொசுவுக்கு பிடிக்காத வாசனை பூண்டு வாசனை! இந்த பூண்டு வாசனையை கண்டா கொசுவுக்கு சுத்தமா பிடிக்காது! அதனால நீங்க பூண்டு சாப்பிட்டிங்கனா அந்த பூண்டு நாத்தம் தாங்காம கொசு ஓடியே போய்விடும்!

நொச்சி இலை மிகச் சிறந்த கொசுவிரட்டி. 

பேய்துளசி, காட்டுத்துளசி ஆகியவையும் கொசுக்களை அப்புறப்படுத்த உதவும். இவற்றைத் தூளாக்கி, மாலைப் பொழுதில் சாம்பிராணி புகைபோடுவதுபோல தீயிலிட்டு வீடு முழுவதும் பரவச் செய்ய வேண்டும். பின்னர் பூண்டு எண்ணெய், நீரைச் சேர்த்து வீட்டின் ஜன்னல்களில் தடவி, கதவைப் பூட்டிவிட்டால் அன்றைய நாள் முழுவதும் கொசுக்கள் வீட்டுக்குள் புகாது.

இதேபோல புதினா, கேந்தி ஆகிய செடிகளைத் தொட்டியில் வளர்த்து அவற்றை மாலை நேரங்களில் ஜன்னல்களின் அருகே வைத்தால் கொசுக்கள் வீட்டுக்குள் புகாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்கு பூ மருத்துவ பயன்கள் / Butterflypea Flower Tea / Blue Tea / Diabetics / Cancer / Weight Loss / Tamil Health Tips / Health Tips