ஜீரணத்துக்கான வேப்பிலை கட்டி / Home Remedy for Digestion
வேப்பிலை கட்டி
தேவையானவை:
இளசான நார்த்தை இலைகள் - 1கப்
இளசான எலுமிச்சை இலைகள் - 1கப்
எலுமிச்சை சாறு -2 ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 10
உப்பு - சுவைக்கு
ஓமம் - 1ஸ்பூன்
பெருங்காயதூள் - 1ஸ்பூன்
செய்முறை:
இலைகளை
கழுவி, நரம்பை எடுத்து விடவும். இத்துடன் உப்பு , மிளகாய் வற்றல் , ஓமம் , பெருங்காயத்தூள், எலுமிச்சை சாறு சேர்த்து , மிக்ஸியில் அரைக்கவும். இது ஊறுகாய் போல. விருந்தை ஜீரணிக்க உதவும். இதை பாட்டலில் போட்டு பிரிட்ஜ் வைத்தால் , பல வாரங்கள் கெட்டு போகாது .
கருத்துகள்
கருத்துரையிடுக