நீரிழிவு நோய்க்கான இன்சுலின் இலை சட்னி /Insulin leaf Chutney for Diabetics


இன்சுலின் இலை சட்னி 

தேவையான பொருட்கள் : 

இன்சுலின் இலை - 5nos

கொத்தமல்லி - 1கைப்பிடி 

தேங்காய் துருவல் - 2துண்டுகளில் இருந்து துருவினது.

உளுந்து - 2ஸ்பூன் 

காய்ந்த மிளகாய் - 4

பூண்டு - 4 பல் 

இஞ்சி - சிறு துண்டு 

மிளகு - 5nos 

உப்பு - ருசிக்கு 

செய்முறை 

முதலில் கடாயில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், உளுந்து வறுத்து மிக்ஸி ஜாரில் போடவும் .

பின் அதே கடாயில் தேங்காய் துருவல் ,பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி , மிளகு போட்டு வதக்கி கடைசியில் இன்சுலின் இலைகளை சேர்க்கவும் . 

ரொம்ப நேரம் வதக்க வேண்டாம். உப்பு சேர்த்து கொஞ்சம் கரகரப்பாக அரைக்கவும். புளி சேர்க்க வேண்டாம் . வேண்டும் என்றால் கடுகு  கறிவேப்பில்லை போட்டு தாளிக்கலாம். 

சர்க்கரை நோயாளிகள் இந்த சட்னி தாராளமாக சாப்பிடலாம். தினம் 2 இலைகளை பச்சையாக சாப்பிடலாம். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்கு பூ மருத்துவ பயன்கள் / Butterflypea Flower Tea / Blue Tea / Diabetics / Cancer / Weight Loss / Tamil Health Tips / Health Tips

கொசுவை விரட்ட வழிகள் / Natural ways to get rid of Mosquitoes in Tamil / Tips in Tamil