குழந்தைகளுக்கு சளி இருமல் குணமாக / Home Remedies for Babies Cold and Fever
பனிக்காலத்தில் எல்லோரையும் சுலபமாக தாக்க கூடியது சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவை
பெரியவர்களை விட குழந்தைகள் தான் அதிகம் சளி காய்ச்சலால் அவதியுறுகின்றனர்
வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு அதற்கான வீட்டு வைத்திய முறைகளை இக்கட்டுரையில் காண்போம்
குறிப்பு : பச்சிளம் குழந்தைகளுக்கு வீட்டு வைத்திய முறைகள் சிலது ஒத்துக்கொள்ளாது என்பதால் குழந்தைகளின் வயதை வைத்து இந்த முறைகளை பின்பற்றி பயன்பெறுங்கள்
கற்பூரவள்ளி இலை
கற்பூரவள்ளி இலை, தூதுவளை, வல்லாரை, இவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து 100 மி.லி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து 50 மி.லியாக சுண்டக் காய்ச்சி, அதனுடன் சிறிது பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் மூக்கடைப்பு நீங்கும். சுவாசம் சீராகும்
கற்பூரம்
தேங்காய் எண்ணெயை சிறிது சூடாக்கி அதில் தூள் செய்த கற்பூரத்தை போடுங்கள். இது நன்றாக ஆறிய பிறகு அதில் இருந்து 4 முதல் 5 சொட்டுகள் எண்ணெயை உள்ளங்கையில் தேய்த்து குழந்தையின் மார்பு பகுதியில் நன்றாக தடவி விடுங்கள்.
குறிப்பு : மிகவும் குறைவான அளவு கற்பூரத்தை பயன்படுத்துங்கள். ஏனெனில் அதிகளவு கற்பூரத்தை பயன்படுத்தும் போது அது குழந்தையின் சருமத்தை பாதிக்க கூடும்.
.மஞ்சள்
விரலி மஞ்சளை எடுத்துக் கொண்டு அதை மெழுகுவர்த்தி அல்லது விளக்கு எரியும் நெருப்பில் சுட்டுக் கொள்ளுங்கள். அந்த புகையை ஒரு நிமிடம் குழந்தை சுவாசிக்கும் படி செய்யுங்கள்.
குறிப்பு : மஞ்சள் எரிந்த பிறகு அது நூல் போல தான் வரும் என்பதால் புகையை சுவாசிக்க வைக்க பயப்பட வேண்டாம்
பூண்டு
2 பல் பூண்டை எடுத்து உரித்துக்கொண்டு அதை 50 மில்லி தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் வரை வேக விடவும். ஆறிய பிறகு இந்த தண்ணீரை எடுத்து 2 முதல் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை குழந்தைக்கு தரவும்.
குறிப்பு : 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதனை தர வேண்டும்.
இஞ்சி
சளியை வெளியேற்றும் தன்மை இஞ்சிக்கு உள்ளது மேலும் மூக்கடைப்புக்கும் இஞ்சி சிறந்த தீர்வளிக்கும். இஞ்சியை பொடியாக துருவிக் கொண்டு அதனை வெந்நீரில் போட்டு வைத்து 10 நிமிடங்களுக்கு பிறகு அந்த தண்ணீரை குழந்தைக்கு தரலாம்.
குறிப்பு : 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதனை தர வேண்டும்.
துளசி இலைகள்
துளசி இலையில் சிறந்த மருத்துவ தன்மை உள்ளதால் இதனை தண்ணீர் அல்லது பாலுடன் சேர்த்து தரலாம். தண்ணீரில் இதனை ஒரு மணி நேரம் ஊறவைத்து பின் அந்த தண்ணீரை குழந்தைக்கு கொடுக்கலாம்.
குறிப்பு : இதனை 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு தர வேண்டும்.
தேன்
ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு அரை டீஸ்பூன் தேனை எடுத்து அதை பாலில் கலந்து நாளொன்றுக்கு இரு முறை தரலாம்
ஓமம்
ஓமத்தை ஒரு கடாயில் போட்டு மிதமான தீயில் வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனை ஒரு துணியில் கொட்டி மூட்டை போல கட்டிக் கொள்ளுங்கள். இதனை குழந்தையின் மூக்கருகே கொண்டு சென்று சுவாசிக்க வையுங்கள். அல்லது குழந்தையின் மூக்கருகே இதனை வைத்து விடலாம்.
கீழ்க்கண்ட அறிகுறிகள் உங்கள் குழந்தையிடம் தென்பட்டால் உடனே மருத்துவரை சந்திக்கவும் :-
1. மூக்கில் இருந்து நீர் வடியும் போது அது மஞ்சள் அல்லது அடர் பச்சை நிறத்தில் இருந்தால்
2. அதிகளவிலான சளி வெறியேறும் போது (மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் வெளியேறினால்)
3. அளவு கடந்த காய்ச்சல்
4. அலர்ஜியின் காரணமாக உணவை விழுங்குவதில் சிரமம் இருந்தால்
5. மூச்சை இழுப்பதில் சிரமம்
6. சுவாசிக்கும் நேரம் அதிகரித்தால் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் குழந்தையுடன் உடனே மருத்துவரை அணுகவும் .
கருத்துகள்
கருத்துரையிடுக