கொள்ளு ரசம்: உடல் எடைகுறைய, சளி தொல்லை நீங்க / Horsegram Rasam for Weight lose and Cold tips in tamil

 தேவையானவை:

கொள்ளு – அரை கிண்ணம்,

புளி – 50 கிராம்,

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,

மல்லி, மிளகு – தலா ஒரு தேக்கரண்டி,

சீரகம் – 2 தேக்கரண்டி,

தக்காளி – 2, பூண்டு – 3 பல்,

பச்சை மிளகாய் – 2,

உப்பு – தேவையான அளவு,

எண்ணெய் – 3 தேக்கரண்டி,

கடுகு, சீரகம் – தலா அரை தேக்கரண்டி,

காய்ந்த மிளகாய் – 1.


செய்முறை:

கொள்ளை ஊறவைத்து அலசி, தண்ணீர் சேர்த்து வேகவைத்து, மசித்துக் கொள்ளவும்.

ரசப்பொடிக்கான மிளகு, சீரகம், மல்லியை மின் அம்மி (மிக்ஸி) அல்லது அம்மியில் பொடித்துக்கொள்ளவும்.

புளியை ஊறவைத்துக் கரைத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மசித்த கொள்ளு, தண்ணீர், அரைத்த பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, இளஞ்சூட்டில் வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைப் போட்டுத் தாளித்து, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, அதை, ரசத்தில் கொட்டி இறக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையைச் சேர்க்கவும்.



பலன்கள்:

கொள்ளு, கொழுப்பைக் குறைக்கும் என்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்குச் சிறந்த தேர்வு. கோடையிலும் சளித் தொல்லையால் அவதிப்படுபவர்கள், இந்த ரசத்தை அருந்தலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்கு பூ மருத்துவ பயன்கள் / Butterflypea Flower Tea / Blue Tea / Diabetics / Cancer / Weight Loss / Tamil Health Tips / Health Tips

ஆளி விதைகள் பயன்கள் / Flax Seeds Benefits / Tamil Health Tips / Lifestyle tips / Health Remedies in Tamil / Aali Vithaigal / Tamil Health Remedies

அடர்த்தியா முடி வளர வீட்லயே தயாரிக்கலாம் பிருங்கராஜ் எண்ணெய்! / Bhringraj Oil for Hair Growth / Hair Growth / Hair Oil / Homemade Hair Oil