ஒரு காளையின் அறிவுரை / Advice of the Bull

 ஒரு விவசாயிக்கு விசுவாசமான காளைமாடு ஒன்னு இருந்தது. அது எல்லா விதத்திலும் அவருக்கு உதவியாய் இருந்தது. 

ஒரு நாள் அது பக்கத்துல கொசு ஒன்னு வந்துச்சு. அந்த கொசு காளை கிட்ட சொல்லிச்சாம், “நீ தினமும் அந்த விவசாயிக்கு நிறைய உதவி பண்ணுற, நீ தினமும் அந்த விவசாயியை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கூட்டிட்டு போற. அதுக்கு பதில் உனக்கு என்ன தான் கிடைக்குது வெறும் புல் மட்டும்தான் சாப்பிடக் கொடுக்கிறார்கள்”.

அதுக்கு அந்த காளைமாடு சொல்லிச்சாம், “இங்க பாரு நண்பா அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல. மனிதர்களுக்கு உதவி பண்றது எனக்கு ரொம்பவே பிடிக்கும், அவங்க என்ன ரொம்பவே நல்லா பார்த்துக்குறாங்க”. அதுக்கு அந்த கொசு சொல்லுச்சாம், “இந்த மனிதர்கள் அவர்களோட தேவைக்காக தான் உன்னை பயன்படுத்துறாங்க அதனால தான் நான் இந்த மனிதர்களுக்கு உதவி பண்றது இல்லை.அதுக்கு பதில் அவர்களோட ரத்தத்தை நான் உரிந்து விடுவேன், ஆனால் நீ ரொம்ப பெரிய உருவமாக இருந்தும், இந்த மனிதர்களுக்கு நீ அடிமையாய் இருக்கிறாய். ஆனா என்ன பாரு நான் ரொம்ப சின்னதா இருக்கேன் ஆனாலும் அவர்களுடைய ரத்தத்தை  உரிந்து கொண்டு இருக்கிறேன்”.

அந்த காளை மாடு சொல்லுச்சு, “நான் மனிதர்களுக்கு ஏன் உதவி பண்ணுவேன் தெரியுமா, அவங்க எனக்கு சாப்பாடு கொடுக்குறாங்க, தங்க இடம் கொடுத்து இருக்காங்க, உடம்பு சரி இல்லனா ரொம்ப நல்லா கவனிக்கிறார்கள், நான் வேலை செய்தால் பாசத்தோட தட்டிக் கொடுக்கிறார்கள்.  அதனால தான் நான் அவங்களுக்கு ரொம்ப விசுவாசமா இருக்கிறேன்” என்றது.

அதற்கு கொசு சொல்லுச்சு “ஆனா நீ பண்ற வேலைக்கு இது ரொம்ப கம்மியா தெரியலையா? நீ ராத்திரியும் பகலும் வேலை செய்தால் உனக்கு அன்பு மட்டும்தான் கொடுக்குறாங்க. ஆனால் நான் உன்னை விட ரொம்பவும் பரவாயில்லை, பார்க்க ரொம்ப குட்டியா இருந்தாலும் ஒருநாளும் அவர்களுக்கு நான் அடிமையாக இருந்ததில்லை” என்றது கொசு.


அதற்கு காளை மாடு சொல்லுச்சு, “நீ ரொம்பவே முட்டாளா இருக்க,  இதுக்கெல்லாம் நீ பெருமை படவே கூடாது. மனுஷங்களுக்கு ஏன் உன்னை பிடிக்கலைன்னா நீ அவங்களோட ரத்தத்தை உரியுறதுனால, அவங்களுக்கு எந்த உதவியும் பண்ண மாட்டேங்குற, நீ ஒரு பூச்சியாக மட்டும்தான் அவங்களுக்கு தெரியுற” என்றது.

“அதைப் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை”என்றது கொசு. மாடு சொன்னதை கேட்காமல் அந்த கொசு அங்கிருந்து பறந்து போனது. எப்பவும் போல ஒரு நாள் அந்த விவசாயி மேல் போய் உட்கார்ந்து கொசு அவரோட இரத்தத்தை உரிய தொடங்கியது. விவசாயி அந்த கொசுவை ஒரே அடி அடித்து விட்டார், அதுவும் செத்துப் போச்சு. கெட்டது செய்தால் கெட்டதே விளையும்.

நீதி : எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்ய நேரிடும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்கு பூ மருத்துவ பயன்கள் / Butterflypea Flower Tea / Blue Tea / Diabetics / Cancer / Weight Loss / Tamil Health Tips / Health Tips

கொசுவை விரட்ட வழிகள் / Natural ways to get rid of Mosquitoes in Tamil / Tips in Tamil