இடுகைகள்

ஜனவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அடர்த்தியா முடி வளர வீட்லயே தயாரிக்கலாம் பிருங்கராஜ் எண்ணெய்! / Bhringraj Oil for Hair Growth / Hair Growth / Hair Oil / Homemade Hair Oil

படம்
  தேவையான பொருட்கள் : தேங்காயெண்ணை  - 500 மி. லி மாட்டுப்பால் - 250 மி. லி(காய்ச்சின பாலை எடுத்துக் கொள்ளுங்கள்) தேங்காய் துருவல் - 200 கிராம் நெல்லிக்காய் பவுடர் - 50 கிராம் கரிசலாங்கண்ணிப் பொடி - 50 கிராம் அதிமதுரம் பவுடர் - 50 கிராம் திரிபலா பவுடர் - 50 கிராம் கற்றாழை ஜெல் - 25 - 50 கிராம் செம்பருத்தி பூ பேஸ்ட் - 25-50 கிராம் ​ பிருங்கராஜ் எண்ணெய் தயாரிக்கும் முறை நெல்லிக்காய், பிருங்கராஜ் , அதிமதுரம், திரிபலா, கற்றாழை ஜெல் போன்ற மூலிகைகளின் பொடிகளை ஒரு அகன்ற பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு மூலிகைகளிலும் 10 கிராம் அளவை தனியாக எடுத்து விட்டு மீதமுள்ள மூலிகைகளை மட்டும் அதில் சேருங்கள். இதனுடன் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்க விடுங்கள். இப்பொழுது தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து 500 மி. லி வரும் வரை வற்ற வைக்க வேண்டும். மிதமான தீயில் வைத்து கொதிக்கும் வரை நன்றாக கிளற வேண்டும். 500 மில்லி லிட்டராக தண்ணீர் குறைந்த உடன் கஷாயத்தை வடிகட்டி தனியாக வைத்து கொள்ளுங்கள். ஒரு அகன்ற பாத்திரத்தில் 500 மி. லி தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள் ளுங்கள். அதில் வடிகட்டி வைத்துள்ள கஷா

அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு வைட்டமின் இ ஆயில் இப்படி யூஸ் பண்ணுங்க / Tamil Hair care Tips / Hair Growth Tips / Long Hair Tips / Vitamin E Oil Tips / Vitamin E oil For Hair / Evion Tablets Uses in Tamil

படம்
தேவையானது : வைட்டமின் இ மாத்திரைகள் - 5 (கூந்தல் நீளத்துக்கேற்ப தேவையெனில் அதிகரித்துகொள்ளலாம்) வைட்டமின் இ மாத்திரைகள் கடைகளில் கிடைக்கும். மாத்திரைகளை பிரித்து அதிலுள்ள எண்ணெயை தனியாக எடுக்கவும். இதை சூடுபடுத்த வேண்டாம். எப்படி அப்ளை செய்வது? கூந்தல் அழுக்கில்லாமல் சுத்தமானதாக இருக்க வேண்டும். கூந்தல் சிக்கில்லாமல் படிய சீவி விடுங்கள். கூந்தலை பகுதி பகுதியாக 6 முதல் 8 பகுதி வரை பிரித்து வையுங்கள். பிறகு விரல்களால் எண்ணெய் தொட்டு நன்றாக உச்சந்தலையில் சுழற்சி முறையில் மென்மையாக தொடர்ந்து 15 முத 20 நிமிடங்கள் வரை மென்மையாக மசாஜ் செய்யுங்கள். எல்லா இடங்களிலும் பரவட்டும். இறுதியாக கூந்தல் முழுவதும் முனை வரை தடவி விடுங்கள். இந்த எண்ணெய் வைத்தால் எண்ணெய் பசை போல் இருக்குமே என்று கவலை வேண்டாம். இந்த எண்ணெய் ஒட்டாது என்பதால் இதை நன்றாக மசாஜ் செய்யலாம். பிறகு 2 அல்லது 3 நாட்கள் கழித்து தலைக்குளியல் மேற்கொள்ளலாம். இதை எல்லோருமே செய்யலாம். பாதிப்பில்லாதது. தொடர்ந்து செய்து வந்தால் முடிக்கு வேண்டிய ஊட்டச்சத்து கிடைக்கும். முடி உதிர்வு நன்றாகவே கட்டுப்படும்.  வைட்டமின் இ ஆயில் முடியை வலுப்படுத்து

ஆளி விதைகள் பயன்கள் / Flax Seeds Benefits / Tamil Health Tips / Lifestyle tips / Health Remedies in Tamil / Aali Vithaigal / Tamil Health Remedies

படம்
 ஆளி விதைகள் என்றழைக்கப்படும் Flaxseeds , நம்முடைய உடலுக்குத் தேவையான பல சத்துகளை உள்ளடக்கிய பெரும் மருந்தாகவும், எடை குறைப்பு மற்றும் கேச வளர்ச்சிக்கு உதவக்கூடிய அருமருந்தாகவும் பலராலும் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல உணவு நிபுணர்களும் உடலின் பல பிரச்னைகளுக்கும், தேவையான ஊட்டச்சத்திற்கும் பரிந்துரைக்கக்கூடிய உணவுப் பொருளில் ஆளி விதைகளுக்கும் இடம் உண்டு. இப்படி பல பயன்களை உடலுக்குக் கொடுக்கக்கூடிய ஆளி விதைகள் பற்றி அறிந்தவர்கள், தங்கள் உணவில் அதையும் தவறாது சேர்த்துக்கொள்கின்றனர். ஆளி விதைகள் என்றால் என்ன?   * ஆளி விதைகள் பழுப்பு நிறத்தில் சூரியகாந்தி விதை போன்று இருக்கக் கூடிய விதைகள். மிகவும் கடினமாகவும், மேற்பகுதி மொறுமொறுவெனவும் இருக்கும். இந்த விதைகளை நன்றாக மென்று சாப்பிட வேண்டும், இல்லையென்றால் அதன் பலன் முழுமையாக உடலுக்குக் கிடைக்காமல் போய்விடும். எனவே, பெரும்பாலும் ஊறவைத்தோ, அல்லது அரைத்துப் பொடியாகவோ உண்ணப்படுகிறது. * ஆளி விதைகளை மருத்துவர்கள் அல்லது ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரையின் கீழே எடுத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் ஆளிவிதை பொடியை உட்கொள்ளவே பரிந்துரை

இரத்த சிவப்பணுக்கள் அளவை அதிகரிக்க / Hemoglobin Foods / Blood Increasing Food / Iron Foods in Tamil / Hemoglobin Tips in Tamil / Tamil Health Tips

படம்
   இரத்த சோகை என்பது இரத்தம் தொடர்பாக ஏற்படும் ஒரு சுகாதார நிலை. இது இரத்தத்தில் ஹீமோகுளோபின் மற்றும் இரத்த சிவப்பணுக்களின் குறைபாடு இருக்கும்போது ஏற்படும். உங்கள் உடலில் இரும்புச் சத்து குறைவாக இருப்பதால், சோர்வு, பலவீனம் மற்றும் உடல் சோர்வை ஏற்படுத்தலாம். ஆனால் இது இரும்புச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வதன் மூலம் தீர்க்கப்படும் ஒரு பிரச்சனை. இரும்புச்சத்து உள்ள உணவுகள் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். இரும்புச்சத்து பல உணவுகள் அல்லது மூலிகைகளில் காணப்படுகிறது, இது ஹீமோகுளோபின் உற்பத்திக்கு அவசியம். பீட்ரூட்  இரத்த நிறத்தில் இருக்கும் பீட்ரூட்டில் இரும்பு, தாமிரம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் பி1, பி2, பி6, பி12 மற்றும் சி ஆகியவை நிறைந்துள்ளன. பீட்ரூட்டில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலில் சிவப்பு இரத்த அணுக்கள் (ஆர்பிசி) உற்பத்தியைத் தூண்டி மேம்படுத்துகின்றன. இதனால், உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். பீட்ருட் சாறு  உங்கள் உணவில் பீட்ரூட்டை சேர்க்க பல வழிகள் உள்ளன. ஆனால், பீட்ருட் சாறு உங்கள் உடலுக்கு பல அதிசயங்களை செய்யும். ஒரு பிளெண்டரி

வாழை இலையின் பயன்கள் / Banana Leaf Benefits / Health Benefits of Banana Leaf / Health Tips in Tamil / Food Tips in Tamil / Home Tips in Tamil / Remedies in Tamil

படம்
 1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும். 2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும். 3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மணமாகவும் இருக்கும். 4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும். 5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவி வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும். 6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும். 7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும். 8.வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதி

சிமிளி / Simili / Ragi Balls / Ragi / Ragi Recipes / Tamil Recipes / Tamil Health Recipes / Tamil Cooking / கேழ்வரகு / Kelvaragu cooking / Tamil Health Tips

படம்
 தேவையானவை : கேழ்வரகு மாவு - 2 கப் வறுத்த வேர்கடலை - 3/4 கப் எள் - 100 கிராம் வெல்லம் - 300 கிராம் ஏலக்காய் - 6 நெய் - 2 தேக்கரண்டி செய்முறை : முதலில் கேழ்வரகு மாவினை இட்லி பானையில் வைத்து அவிக்க வேண்டும். வேர்க்கடலை தோலை நீக்கி சுத்தம் செய்யவும். எள்ளை வெறும் வாணலியில் வறுக்கவும். பொரிந்தவுடன் இறக்கி விடவும். ஏலக்காயை பொடித்து கொள்ளவும். பிறகு கல் உரலில் வேர்கடலையையும், எள்ளையும் போட்டு இடிக்க வேண்டும். இரண்டும் நன்றாக மாவானபின், அவித்த கேழ்வரகு மாவினை அதனோடு சேர்த்து இடிக்க வேண்டும். எல்லாம் ஒன்றாக கலந்ததும் கடைசியில் வெல்லத்தைப் போட்டு இடிக்க வேண்டும். எல்லாம் ஒன்றாய் கலந்து கெட்டியாக, அழுத்தமான அல்வா பதத்தில் வரும் போது நெய், ஏலப்பொடி போட்டுக் கலந்து உரலில் இருந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். சுவையும் மணமும் நிறைந்த சத்தான இனிப்பு இது.

முடி வளர்ச்சிக்கு உதவும் முருங்கைக் கீரை / முடி கருகருவென வளர / Hair Care Tips in Tamil / Moringa Leaves for Hair / Hair Care / Murungaikeerai for Hair / Hair Regrowth Tips / Hair Packs / Hair Packs in Tamil

படம்
உ ங்கள் முடியின் வளர்ச்சியை அதிகரித்து, முடியின் நீளத்தை அதிகரிக்க முருங்கை இலையை எப்படி பயன்படுத்தி ஹேர்பேக் செய்யலாம் என்று பார்க்கலாம் தேவையான பொருட்கள்: 2 டீஸ்பூன் முருங்கை கீரை தூள் அல்லது முருங்கை இலை பேஸ்ட் 2 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் செய்முறை : நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் முருங்கை கீரை தூளை பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது நாமே பறித்து தூள் செய்த முருங்கைக் கீரை தூளையும்  எடுத்துக் கொள்ளலாம் . அதனுடன் மேலே குறிப்பிட்டுள்ள மற்ற பொருட்களையும் சேர்த்து முருங்கைக் கீரை பேஸ்ட் தயாரிக்கவும். அந்தக் கலவையை உங்கள் விரல் நுனியில் எடுத்து உச்சந் தலையில் நன்கு மசாஜ் செய்யவும். இதனை முடியின் வேர்களில் மட்டுமே பூச வேண்டும். முடியில் பூசக்கூடாது. தலையில் அப்ளை செய்து விட்டு அரை மணி நேரம் கழித்து எப்போதும் போல் தலைக்கு குளிக்கவும். உ ங்கள் தலைமுடியின் இயற்கையான ஷைனை அதிகரிக்கவும், முடியின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகளும் கிடைக்க முருங்கை கீரையை எப்படி தெரியுமா பயன்படுத்த வேண்டும். தேவையான பொருட்கள் : 3 டீஸ்பூன் முருங்கைக் கீரை இலையின் தூள் 2 டீஸ்பூன் நெய் 1 ட

சுண்டைக்காய் பயன்கள் / sundakkai / Turkey Berry / Sundakkai Health Benefits / Health Tips in Tamil / Sundakkai Tips in Tamil

படம்
 சுண்டைக்காய் வத்தலாக சாப்பிடுவதைவிட அதை பச்சையாக குழம்பு வைத்து சாப்பிட்டால் பல நன்மைகளை பெற முடியும்.  குறிப்பாக சுண்டைக்காயை வைத்து சாம்பார், காரக்குழம்பு வைத்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். கசப்பாகத்தான் இருக்கும் என்றாலும் அதன் நன்மைகள் உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகின்றன என்பதை மறவாதீர்கள். சரி அதன் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள். பசியின்மையை போக்கும் :  சிலருக்கு பசி உணர்வே இல்லை எனில் அது உடல் நலனின்மையின் அறிகுறியாகும். எனவே அதை உடனே சரி செய்யும் வேலையில் இறங்க வேண்டும். அந்த வகையின் சுண்டைக்காய் உங்கள் பசியை தூண்டுவதில் சிறப்பாக செயலாற்றுகிறது. எனவே சுண்டைக்காயை வாரம் ஒரு முறையேனும் சமைத்து சாப்பிட வேண்டும். வயிற்றுக்கோளாறு :  உங்களுக்கு செரிமானமின்மை, வயிற்று மந்தம் , வயிற்றுக்கோளாறு போன்ற வயிற்றுத் தொந்தரவுகள் இருக்கின்றன எனில் அதற்கு சுண்டைக்காய் நல்ல மருத்துவ பலனாக இருக்கும். எலும்புகளை வலுவாக்கும் :  கால்சியம் சத்து சுண்டைக்காயில் அதிகமாக கிடைக்கிறது. எனவே எலும்பு தேய்மானம், எலும்பின் உறுதித்தன்மையை இழக்காமல் இருக்க சுண்டைக்காயை சாப்பிடுங்கள். இது உங்களுக்கு

கிராம்பு பயன்கள் / லவங்கம் / Clove / Health Tips in Tamil / Tamil Health Tips / Benefits of Clove in Tamil / Skin Problems Remedies / Tamil

படம்
 கிராம்பு என்பது ஒரு பூவின் மொட்டு ஆகும்.  இந்த மரத்தின் மொட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின் , வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. பலன்கள் கிராம்பு ஊக்குவித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல் வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமலுக்கு மிகச் சிறந்த நிவாரணி. உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது. ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன. கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது. சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்

வெந்தய களி / Fenugreek Pudding / Vendhaya Kali / Health Tips in Tamil / Health Tips in Tamil / Fiber Rich Food / Constipation Remedy in Tamil / Bone Health Tips in Tamil

படம்
தேவையான பொருட்கள் : வெந்தயப் பொடி 1 கப் பனை வெல்லம் 3 கப் நல்லெண்ணெய் 1 கப் செய்முறை : வெந்தயத்தை முளை கட்டி, உலரவைத்து, பொடித்துக்கொள்ளுங்கள். பனை வெல்லத்தைத் தூள் செய்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து லேசாகக் கொதிக்கவிட்டு வடிகட்டிக்கொள்ளுங்கள். வெந்தயப் பொடியில் கால் கப் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் நன்றாகக் கரைத்துக்கொள்ளுங்கள். அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து வெந்தயக் கரைசல், பனை வெல்லம், நல்லெண்ணெய் சேர்த்து நன்றாகக் கிளறுங்கள். வாணலியில் ஒட்டாத பதம் வரும்வரை கிளறி இறக்குங்கள்.  (வெந்தயத்தை முளைகட்ட முடியாதவர்கள் அதை ஊறவைத்து தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ளலாம்.) இந்தக் களி, நார்ச் சத்து நிறைந்தது. மலச்சிக்கலைத் தவிர்க்கும். எலும்புகள், மூட்டுகளுக்கு வலு கொடுக்கும்.

வல்லாரை டீ / Vallarai Keerai / Brahmi / Healthy Tea / Tamil tips/ Gotu Kola Tea / Health Tea / Piles Remedies / Cancer Remedies / Ulcer / Tamil Tips for Life

படம்
 தாய்லாந்து, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், சீனா நாடுகளில் மருத்துவப் பயன்வாய்ந்த வல்லாரை இலைகள உணவாக பயன்படுத்துகின்றனர்.  இந்த டீ கான்சர், ட்யூடனல் அல்சர், காஸ்ட்ரிக் அல்சர், மூல வியாதிகள், வெண்புள்ளிகள் போன்றவற்றை குணப்படுத்துகின்றன. மற்றும் ஞாபகசக்தியைக் கூட்டியும், நரம்புவியாதிகளுக்கு நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது. செய்முறை: ஒரு சிறிய கட்டு வல்லாரை கீரை 2 டேபிள்ஸபூன் சர்க்கரை (வேண்டாதவர்கள் உப்பு அல்லது இயற்கை இனிப்புகளை சேர்த்துக்கொள்ளலாம்) 230 ml தண்ணீர் மிக்ஸியில் பாதி தண்ணீரை ஊற்றி கழுவி சுத்தப்படுத்திய வல்லாரை இலைகளை தண்டுடன் அடித்து வடித்து ஜீஸாக்கி கொள்ளவும். மீதியுள்ள தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடாக்கி சர்க்கரை சேர்த்து கரைத்துக்கொள்ளவும். இந்த கலவை ஆறியவுடன் வல்லாரை ஜூஸை கலந்து ஐஸ்கட்டிகள் மேலாக இட்டு பறிமாறவும்.

பெருஞ்சீரக ஜூஸ் (சோம்பு) / Fennel Seeds Juice / Juice/ Juices in tamil / Weight loss tips/ Weight Loss Tips in Tamil / Tamil Health Tips / Tamil Health Tips

படம்
தேவையானவை: பெருஞ்சீரகம் (சோம்பு), - 50 கிராம் கல்கண்டு அல்லது கருப்பட்டி - கால் கப். செய்முறை: சோம்பை அரை டம்ளர் நீரில் 2 மணி நேரம் ஊறவிடவும். பிறகு, இதனுடன் பொடித்த கற்கண்டைச் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, மஸ்லின் துணியில் வடிகட்டவும். வடிகட்டிய சாறு அரை டம்ளர் இருக்கும். இதனுடன் ஒன்றரை டம்ளர் நீர் சேர்த்து ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்திருந்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும். பலன்கள்: சோம்பில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி யை அதிகரிக்க உதவும். வாய் துர்நாற்றத்தைச் சரிசெய்யும். உடலின் வளர்சிதை மாற்றத்தைச் சீராக்கும். உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். உடலும் மனமும் புத்துணர்வு பெற உதவும். மூளை சுறுசுறுப்பாகவும் புத்துணர்வுடனும் செயல்பட உதவும். செரிமானக் கோளாறைச் சரிசெய்யும். சீரான தூக்கத்துக்கு உதவும்.

டயாபடீஸ் டயட் / Diabetes / Diet / Diabetes Tips in Tamil / Tamil health Tips / Health Tips / Sugar Remedies / Sugar Remedies in Tamil

படம்
இன்றைக்கு என்ன சாப்பிடலாம்? இட்லி கூட ஒண்ணு சாப்டா சுகர் லெவல் அதிகமாகுமா? தோசை சாப்பிடலாமா ? கேழ்வரகு ? இப்படி பாத்து பாத்து யோசிச்சு சாப்பிடுறது எல்லாம் என்ன வாழ்க்கை ? இனிமேல் பயம் இல்லாம இந்த டயட்-அ மாத்தி பாருங்க ! நிச்சயம் வாழ்க்கை ஆரோக்கியமா மாறும். காய்களும் கனிகளும் :- இனிப்பு காரணமாக நீரிழிவாளர்கள் பழங்கள் சாப்பிடக்கூடாது என்றே பலரும் நினைக்கிறார்கள். ‘கடவுள் பாதி மிருகம் பாதி’ என்பது போல, இதில் பாதி உண்மையும் பாதி தவறும் உண்டு. சில பழங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதைத் தவிர, பொதுவாக பழங்களும் காய்கறிகளும் நன்மை அளிக்கக் கூடியவையே. வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, ஆன்டி ஆக்சிெடன்ட் என இவை அள்ளித் தருபவை அனைத்தும் அருமையே. 1. ஒவ்வொரு உணவிலும் உங்கள் தட்டில் பாதி அளவு காய்கறி, பழங்கள் இருக்கட்டும். 2. சிப்ஸ், சாக்லெட்ஸ், இன்ன பிற இனிப்புகளுக்குப் பதிலாக, வெஜிடபிள் சாலட் அல்லது பழங்களைத் தேர்ந்தெடுங்கள். 3. பழரசங்கள் மற்றும் பேக்கேஜ்டு பானங்களைத் தவிர்த்து, ஃப்ரெஷ் ஆன முழுமையான பழங்களையே சாப்பிடுங்கள். 4. கரும்பச்சை, ஆரஞ்சு, மஞ்சள் காய்கறிகளை அதிகம் சேர்க்கலாம். 5. மா, பலா,

மூலிகை ஊறல் நீர் / Herbal Water / Health Tips in Tamil / Herbal Tips / Water Therapy / மூலிகைகள் / Herbals

படம்
 தேவையானவை:  ஆவாரம்பூ - ஒரு கைப்பிடியளவு,  ஏலக்காய் - ஒன்று,  ஜாதிக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,  வெட்டி வேர் - சிறிதளவு,  துளசி, புதினா - சிறிதளவு,  பனங்கற்கண்டு - ஒரு டீஸ்பூன். செய்முறை:  மண் குடுவையில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி, அதில் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களைச் சேர்த்து இரவு முழுவதும் ஊறவிடவும். மறுநாள் காலையில் வடிகட்டி பருகலாம். பயன்கள்:   உடல் உஷ்ணம் நீங்கும்.  சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.  தேவையற்ற கொழுப்பு கரையும்.  உயர் ரத்த அழுத்தம் குறையும்.

கொழுப்பைக் குறைக்கும் பயறு வகைகள் / சிறுதானியங்கள்/ Weight lose tips in Tamil/ Lentils / Pulses/ Millets/ Health Tips of Wheat, Rice & Beans / Tamil Tips

படம்
உடலுக்குச் சக்தியும் வலுவும் தரும் உணவுப் பொருட்களில் தானியங்களுக்குத் தனியிடம் உண்டு. ஒவ்வொரு தானியத்துக்குக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. அவற்றைத் தெரிந்துகொண்டு சாப்பிட்டு உடலை வலுப்படுத்தலாம். சோளம்: உடலுக்கு உறுதியை அளிக்கும். உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப்புண், வாய் துர்நாற்றத்தைப் போக்கும். கோதுமை: நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்த உணவு. மலச்சிக்கல் உண்டாகாது. உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடை யைக் குறைக்கும். உடல் வறட்சியைப் போக்கும். குடல் புண்ணை ஆற்றும். வரகு: உடல் எடையை குறைக்கும். மாதவிடாய் கோளாறுகளைத் தடுக்கும். கொண்டைக்கடலை: பக்கவாதநோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது. சோயாபீன்ஸ் : அனைத்து வைட்டமின் பி வகைகளும் உள்ளன. இவை இதயம், கல்லீரல் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதிக புரோட்டின், நார்ச்சத்து உள்ளதால் சோர்வடைந்த இதயத்திற்கு சோயாவின் பாதுகாப்பு அபரிமிதமானது. இயற்கையான ஆண்டி ஆகிசிடென்ட் நிறைந்தது. அதிக மினரல்கள் உள்ளன. உறுதியான எலும்புகள் உருவாகும். மெனோபாஸ் பிரச்சினைகளைத் தடுக்கும். உடம்பில் கொழுப்பின் அளவைக் குறைத்து இரத்த குழாய்களுக்குள் அட