முடி வளர்ச்சிக்கு உதவும் முருங்கைக் கீரை / முடி கருகருவென வளர / Hair Care Tips in Tamil / Moringa Leaves for Hair / Hair Care / Murungaikeerai for Hair / Hair Regrowth Tips / Hair Packs / Hair Packs in Tamil

ங்கள் முடியின் வளர்ச்சியை அதிகரித்து, முடியின் நீளத்தை அதிகரிக்க முருங்கை இலையை எப்படி பயன்படுத்தி ஹேர்பேக் செய்யலாம் என்று பார்க்கலாம்

தேவையான பொருட்கள்:

2 டீஸ்பூன் முருங்கை கீரை தூள் அல்லது முருங்கை இலை பேஸ்ட்

2 டீஸ்பூன் பாதாம் எண்ணெய்

1 டீஸ்பூன் கற்றாழை ஜெல்

செய்முறை :

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் முருங்கை கீரை தூளை பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது நாமே பறித்து தூள் செய்த முருங்கைக் கீரை தூளையும்  எடுத்துக் கொள்ளலாம் . அதனுடன் மேலே குறிப்பிட்டுள்ள மற்ற பொருட்களையும் சேர்த்து முருங்கைக் கீரை பேஸ்ட் தயாரிக்கவும். அந்தக் கலவையை உங்கள் விரல் நுனியில் எடுத்து உச்சந் தலையில் நன்கு மசாஜ் செய்யவும். இதனை முடியின் வேர்களில் மட்டுமே பூச வேண்டும். முடியில் பூசக்கூடாது. தலையில் அப்ளை செய்து விட்டு அரை மணி நேரம் கழித்து எப்போதும் போல் தலைக்கு குளிக்கவும்.


ங்கள் தலைமுடியின் இயற்கையான ஷைனை அதிகரிக்கவும், முடியின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகளும் கிடைக்க முருங்கை கீரையை எப்படி தெரியுமா பயன்படுத்த வேண்டும்.


தேவையான பொருட்கள் :

3 டீஸ்பூன் முருங்கைக் கீரை இலையின் தூள்

2 டீஸ்பூன் நெய்

1 டீஸ்பூன் கற்றாழை ஜெல்



செய்முறை :

குறைந்த தீயில் நெய்யை சூடாக்கி விட்டு பின்னர் அடுப்பை அணைத்து விட்டு மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும். அந்தக் கலவை ஆறிய பின்னர், உங்கள் தலை முடியில் இதனை தடவவும். முடிக்கு தடவிய அதிக அளவில் பேஸ்ட் இருந்தால் அதனை உங்களின் உச்சந்தலையில் தடவலாம். பின் அரை மணி நேரம் கழித்து தலை முடியை அலசுங்கள்.

முடியின் சேதத்தை தடுத்து, முடியின் வளர்ச்சிக்கு முருங்கைக் கீரையை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் :

3 டீஸ்பூன் முருங்கைக் கீரை தூள்

2 டீஸ்பூன் பிசைந்த வாழைப்பழம்

1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்


செய்முறை :

ஒரு பழுத்த வாழைப்பழத்தில் சிறிது எடுத்துக் கொண்டு அதனை நன்றாக பிசைந்து கொள்ளவும். பின்னர் அதனுடன் ஆலிவ் எண்ணெய் மற்றும் முருங்கைக் கீரை தூளை சேர்த்து, தலையில் அப்ளை செய்து கொள்ளவும். அரை மணி நேரம் அப்படியே விட்டு விட்டு பின் குளிர்ந்த நீரில் தலை முடியை கழுவினால் போதும். உங்கள் முடி பளபளக்கும். வாரத்துக்கு ஒரு முறை இந்த ஹேர் பேக்குகளை பயன்படுத்தினால் போதுமானது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்கு பூ மருத்துவ பயன்கள் / Butterflypea Flower Tea / Blue Tea / Diabetics / Cancer / Weight Loss / Tamil Health Tips / Health Tips

அடர்த்தியா முடி வளர வீட்லயே தயாரிக்கலாம் பிருங்கராஜ் எண்ணெய்! / Bhringraj Oil for Hair Growth / Hair Growth / Hair Oil / Homemade Hair Oil