அடர்த்தியா முடி வளர வீட்லயே தயாரிக்கலாம் பிருங்கராஜ் எண்ணெய்! / Bhringraj Oil for Hair Growth / Hair Growth / Hair Oil / Homemade Hair Oil
தேவையான பொருட்கள் :
தேங்காயெண்ணை - 500 மி. லி
மாட்டுப்பால் - 250 மி. லி(காய்ச்சின பாலை எடுத்துக் கொள்ளுங்கள்)
தேங்காய் துருவல் - 200 கிராம்
நெல்லிக்காய் பவுடர் - 50 கிராம்
கரிசலாங்கண்ணிப் பொடி - 50 கிராம்
அதிமதுரம் பவுடர் - 50 கிராம்
திரிபலா பவுடர் - 50 கிராம்
கற்றாழை ஜெல் - 25 - 50 கிராம்
செம்பருத்தி பூ பேஸ்ட் - 25-50 கிராம்
பிருங்கராஜ் எண்ணெய் தயாரிக்கும் முறை
நெல்லிக்காய், பிருங்கராஜ், அதிமதுரம், திரிபலா, கற்றாழை ஜெல் போன்ற மூலிகைகளின் பொடிகளை ஒரு அகன்ற பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு மூலிகைகளிலும் 10 கிராம் அளவை தனியாக எடுத்து விட்டு மீதமுள்ள மூலிகைகளை மட்டும் அதில் சேருங்கள். இதனுடன் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்க விடுங்கள்.
இப்பொழுது தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து 500 மி. லி வரும் வரை வற்ற வைக்க வேண்டும். மிதமான தீயில் வைத்து கொதிக்கும் வரை நன்றாக கிளற வேண்டும். 500 மில்லி லிட்டராக தண்ணீர் குறைந்த உடன் கஷாயத்தை வடிகட்டி தனியாக வைத்து கொள்ளுங்கள்.
ஒரு அகன்ற பாத்திரத்தில் 500 மி. லி தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள் ளுங்கள். அதில் வடிகட்டி வைத்துள்ள கஷாயத்தை சேர்த்து பால் சேர்த்துகொள்ளவும்.
தேங்காய்த்துருவலை மிக்ஸியில் போட்டு அரைத்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அரைத்த தேங்காய் பாலை ஒரு அகன்ற பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது செம்பருத்தி பூ பேஸ்ட்டை அதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மிதமான தீயில் வைத்து இந்த எண்ணெயை நன்றாக கிளறிக் கொண்டே சூடுபடுத்த வேண்டும். எண்ணெய் சலசலப்பு அடங்கும் வரை எண்ணெயை கிளறிவிட்டு கொண்டே இருக்கவும்.
பிறகு இந்த எண்ணெயை காற்று புகாத கண்ணாடி பாட்டில்களில் சேகரித்து வைக்கலாம். ஒன்றரை வருடம் வரை வைத்திருந்து பயன்படுத்தி வரலாம்.
பிருங்கராஜ் எண்ணெயை பயன்படுத்தும் முறை
இந்த பிருங்கராஜ் எண்ணெயை இரவில் தூங்குவதற்கு முன்பு அப்ளை செய்து கொள்ளுங்கள். பிறகு காலையில் எழுந்ததும் தலைக்கு குளிக்க வேண்டும்.
கூந்தலில் இலேசாக சில துளிகள் மட்டுமே எடுத்து பயன்படுத்தி வந்தால் உடனே தலைக்கு குளிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. 2-3 நாட்களுக்கு பிறகு நீங்கள் குளித்துக் கொள்ளலாம். இதுவே அதிகளவு எண்ணெய் பயன்படுத்தும் நாட்களில் அன்றைக்கே தலைக்கு குளிப்பது நல்லது.
பிருங்கராஜ் கூந்தலுக்கு செய்யும் நன்மைகள்
இந்த எண்ணெயில் பயன்படுத்தும் ஒவ்வொரு மூலிகையும் ஒவ்வொரு வேலையை செய்கிறது.
தேங்காயெண்ணெய் கூந்தலுக்கு தேவையான ஈரப்பதத்தையும் பளபளப்பையும் தருகிறது.
மாட்டுப்பால் கூந்தலுக்கு போதுமான போஷாக்குகளையும் ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.
நெல்லிக்காய் பொடியில் ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. இது கூந்தலுக்கு நல்ல கருமையையும் கூந்தல் பிரச்சினைகளை களையவும் உதவுகிறது.
கரிசலாங்கண்ணி பொடி கூந்தல் வளர்ச்சியை தூண்ட உதவுகிறது. இதில் கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான இரும்புச் சத்து காணப்படுகிறது.
அதிமதுரம் பொடி கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது. திரிபலா பொடி கூந்தலுக்கு இயற்கையான நிறத்தை அளிக்கிறது. பொடுகு போன்று உச்சந்தலையில் இருக்கும் சரும பிரச்சனைகளை களைகிறது.
கற்றாழை தலைக்கு குளிர்ச்சியை தருவதோடு அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கூந்தல் பிரச்சினைகளை களைகிறது. செம்பருத்தி பூ பேஸ்ட் கூந்தல் பட்டு போன்று மென்மையாகவும் அடர்த்தியாக வளரவும் உதவுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக