பெருஞ்சீரக ஜூஸ் (சோம்பு) / Fennel Seeds Juice / Juice/ Juices in tamil / Weight loss tips/ Weight Loss Tips in Tamil / Tamil Health Tips / Tamil Health Tips

தேவையானவை:

பெருஞ்சீரகம் (சோம்பு), - 50 கிராம்

கல்கண்டு அல்லது கருப்பட்டி - கால் கப்.



செய்முறை:

சோம்பை அரை டம்ளர் நீரில் 2 மணி நேரம் ஊறவிடவும். பிறகு, இதனுடன் பொடித்த கற்கண்டைச் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, மஸ்லின் துணியில் வடிகட்டவும்.

வடிகட்டிய சாறு அரை டம்ளர் இருக்கும். இதனுடன் ஒன்றரை டம்ளர் நீர் சேர்த்து ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்திருந்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.


பலன்கள்:

சோம்பில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும்.

வாய் துர்நாற்றத்தைச் சரிசெய்யும்.

உடலின் வளர்சிதை மாற்றத்தைச் சீராக்கும்.

உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

உடலும் மனமும் புத்துணர்வு பெற உதவும்.

மூளை சுறுசுறுப்பாகவும் புத்துணர்வுடனும் செயல்பட உதவும். செரிமானக் கோளாறைச் சரிசெய்யும்.

சீரான தூக்கத்துக்கு உதவும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சங்கு பூ மருத்துவ பயன்கள் / Butterflypea Flower Tea / Blue Tea / Diabetics / Cancer / Weight Loss / Tamil Health Tips / Health Tips

அடர்த்தியா முடி வளர வீட்லயே தயாரிக்கலாம் பிருங்கராஜ் எண்ணெய்! / Bhringraj Oil for Hair Growth / Hair Growth / Hair Oil / Homemade Hair Oil